> என் ராஜபாட்டை : தலைமுடியை எவ்வாறு பராமரிப்பது ?

.....

.

Sunday, April 24, 2011

தலைமுடியை எவ்வாறு பராமரிப்பது ?

சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க
வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும்
மண்டை ஓட்டுப் பகுதித் தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.
ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா'  சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய்,
அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற  இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு  வகைகள், உலர் திராட்சை, பேரீட்சை
போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.

கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்துங்கள்.

டென்சனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில்
மட்டுமல்ல முடியிலும் தெரியும்.வாசனைத் திரவியங்கள், பாடி ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள்.அடிக்கடி தலைவலியா? அலட்சியப்படுத்தாதீர்கள். டாக்டரிடம் காட்டுங்கள். தலைவலியால் முடி உதிர்வது நிச்சயம்.பேன், பொடுகு, முடி நுனி வெடிப்பு, போன்ற வகைகளுக்கு டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

Thanks : http://tamil.webdunia.com

2 comments:

  1. டிப்ஸ் குடுத்ததற்கு நன்றி 'தலை'வா.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...